Tuesday, March 3, 2009

நாங்கள் யார்?

எங்களின் நிர்வாகம் கடந்த 2000 -ல் கருவியில் உள்ளூர் / வெளியூர் தொலைபேசி நிலையமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கருவி சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களின் தொலைபேசி சேவையில் ஒரு துணையாக நாங்கள் செயல்பட்டோம். மற்றும், மயிலாடுதுறையில் செயல்படும் புரொபெஷனல் கொரியர்சின் கிளையாகவும் செயல்பட்டுள்ளோம். கருவி உள்ளடக்கிய கிடாரங்கோண்டான், கீழையூர், தலைச்சங்காடு, மேலையூர், மேலப்பெரும்பள்ளம், தருமகுளம், வாணகிரி, பூம்புகார், மணிக்ராமம், திருவெண்காடு, மங்கைமடம், பெருந்தோட்டம், நாங்கூர் ஆகிய கிராமங்களில் கொரியரின் சேவைகளை கொண்டு சென்ற பெருமை எங்களைச் சேரும் . கொரியர் கலெக்ஷன் மற்றும் டெலிவரி சேவை அடிப்படையில் செய்துள்ளோம். மேலும், கூடுதல் இணைப்பாக கருவி சுற்று வட்டார மக்களின் தகவல் தொடர்பு வசதிக்காக தந்தி அனுப்பும் சேவையும் செய்துள்ளோம். 2003 வாக்கில் கூடுதல் வசதியாக சிராக் இன்டர்நெட் சேவையும் இணைத்துக் கொண்டோம். பிரவுசிங், இ-மெயில், சாட்டிங் வசதிகளை கருவி என்ற சிறிய கிராமத்தில் கொணர்ந்த பெருமை என்பதை விட இறைவன் எங்களுக்கு காட்டிய வழி என்றே கருதுகிறோம். எனினும், அடிப்படையில் எவ்வித சொத்துக்களும், பொருளாதார வசதியும் இல்லாத நிலையில் தொடர்ந்து எங்களால் கருவியில் செயல்பட இயலவில்லை. எனவே, எதிர்காலம் எங்களுக்கும் நலமுடையதாக அமைய வேண்டும் என்பதால் கடந்த 02.02.2009 முதல் மேலையூர் பூம்புகார் கல்லூரி அருகில் செயல்படுகிறோம்.

உங்கள் அனைவரின் பொன்னான ஆதரவை என்றும் கோருகிறோம்.

உரிமையாளர்:
க. அன்பழகன் Bsc, DTEM, M.A, M.com (B&IM)
செல்: 9786402661

No comments: